கஜா புயல் …!மக்கள் நலனை பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் …! தினகரன்
மக்கள் நலனை பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், கஜா புயல் பாதிப்பிலிருந்து மக்கள் நலனை பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் .புயலை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது என்று சொல்வதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக கருதாமல், முழு மூச்சாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.