கஜா புயல் பாதிப்பு …! மின்மாற்றியை சீர்செய்தபோது கீழே விழுந்து மின் ஊழியர் உயிரிழப்பு …!
நாகையில் மின்மாற்றியை சீர்செய்தபோது கீழே விழுந்து மின் ஊழியர் சண்முகம் என்பவர் உயிரிழந்துள்ளார்.
கஜா புயலின் கோர தாண்டவத்தால் தமிழகத்தில் பல பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.இதனால் சேதமடைந்தவற்றை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் புயல் தாக்கத்தால் நாகையிலும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நாகையில் மின்மாற்றியை சீர்செய்தபோது கீழே விழுந்து மின் ஊழியர் சண்முகம் என்பவர் உயிரிழந்துள்ளார்.மின்மாற்றியில் இருந்து கீழே விழுந்த ஊழியர் சண்முகம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்தார்