கஜா புயல்…! அரசு,தனியார் ஊழியர்களை மாலை 4 மணிக்குள் வீடு திரும்ப தமிழக அரசு உத்தரவு …!
அரசு மற்றும் தனியார் ஊழியர்களை மாலை 4 மணிக்குள் வீடும் திரும்பும்படி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கஜா புயலையொட்டி பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கஜா புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில்,கஜா புயல் காரணமாக அரசு மற்றும் தனியார் ஊழியர்களை மாலை 4 மணிக்கு முன்பாக வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. கஜா புயல் கரையை கடக்கும் குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் ஊழியர்களை மாலை 4 மணிக்கு முன்பாக உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. கஜா புயல் காரணமாக கடலூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களை மாலை 4 மணிக்கு முன்பாக வீட்டுக்கு அனுப்ப தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.புயல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.