கஜா புயல் நிதி…!விரைவில் நல்ல செய்தி வரும் …!மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவது, யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கோவையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், டெல்லியில் தமிழக விவசாயிகள் நடந்துகொண்ட முறை, எந்த மாநில விவசாயிகளும் செய்யாதது. அவர்களுக்கு இங்குள்ள அரசியல்வாதிகள் நிதியுதவி செய்கின்றனர்.சீமான் அரசியல் மற்றும் சமுதாயம் குறித்த விஷயங்களை மட்டும் பேசட்டும்.கஜா புயல் நிதி தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவை சந்தித்து அறிக்கை அளித்துள்ளேன், விரைவில் நல்ல செய்தி வரும் என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.