கஜா புயல் சேத விபரங்கள்..!அறிக்கை உள்துறை அமைச்சகத்துக்கு விரைவில் அனுப்பப்படும் …!முதலமைச்சர் பழனிசாமி
கஜா புயல் சேத விபரங்கள் குறித்த அறிக்கை உள்துறை அமைச்சகத்துக்கு விரைவில் அனுப்பப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கஜா புயல் தற்போது கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இரவு 12.30 மணிக்கு கஜா புயல் நாகை வேதாரண்யம் இடையே கரையை கடக்க தொடங்கிய போது தீவிர புயலாக இருந்து தற்போது தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கரையை கடந்தது.
இந்நிலையில் கஜா புயலால் நாகை மாவட்டம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. நாகை ,தஞ்சை மற்றும் திருவாரூரில் 12,000 மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் கஜா புயல் சேத விபரங்கள் குறித்த விரிவான அறிக்கை உள்துறை அமைச்சகத்துக்கு விரைவில் அனுப்பப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.