நாளை கரையை கடக்கும் கஜா புயல்..!மணிக்கு 80-90 கி.மீ வேகத்தில் காற்று வீசும்…! வானிலை ஆய்வு மையம்
கஜா புயல் நாளை மாலை கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், சென்னையில் இருந்து 490 கி.மீ தொலைவில் மற்றும் நாகைக்கு வடகிழக்கே 580 கி.மீ. தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது.கஜா புயல் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.நாளை மாலை கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும்.புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 80-90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். மீனவர்கள் வரும் 15-ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் சென்னையில் நாளை முதல் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.