15ம் தேதி பிற்பகல் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும்…!சென்னை வானிலை ஆய்வு மையம்
வருகின்ற 15ம் தேதி பிற்பகல் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,நவம்பர் 15 ஆம் தேதி பிற்பகல் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும். கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் பலத்த காற்று வீசும். சென்னைக்கு நேரடி பாதிப்பு இருக்காது ஆனால் மழை இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.