நாளை நடைபெறவிருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் காரணமாக காரைக்குடி அழகப்பா பல்கலைகழக இணைப்பு கல்லூரிகள், திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக இணைப்பு கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதேபோல் திருவள்ளுவர் பல்கலைகழக உறுப்பு கல்லூரிகள் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் தொழில் நுட்ப கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பில் , இன்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.இன்று நடைபெறவிருந்த தேர்வு வருகின்ற 24 ஆம் தேதிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது.
.இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கஜா புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.
இந்நிலையில் தற்போது கஜா புயல் காரணமாக நாளை நடைபெறவிருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ளார்.தேர்வுகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கஜா புயல் காரணமாக நாளை நடைபெறுவதாக இருந்த பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது என்று பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…