கஜா புயல் அதிதீவிர புயலாக மாறி தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நாகை, கடலூர், திருவாரூர் உள்பட 23 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு (16.11.2018) இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கஜா காலை தீவிர புயலாக மாறியுள்ள நிலையில் தமிழகத்தில் கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம் நேற்றே விடுமுறை அறிவித்த நிலையில் தமிழகத்தில் அநேக இடங்களில் விடிய விடிய மழை பெய்து வருவதால் இன்று காலையில் அரியலூர், சிவகங்கை, தேனி மற்றும் திருப்பூர், ,கரூர்,திண்டுக்கல்,விழுப்புரம் ,திருவண்ணாமலை,பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் திருச்சி, விருதுநகர், தூத்துக்குடி,சேலம் ,ஈரோடு,மதுரை ,கோவை ஆகிய மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
மேலும் நேற்றே கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உட்பட 7 மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் புயல் கரையை கடந்த பின்னரும் அங்கு பலத்த மழை பெய்து வருவதாகவும் பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
தன்னுடைய மத பலத்தை காட்டி வரும் கஜாவிற்கு இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர்.மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்துள்ளது.மேலும் வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாம்பன் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடல் உள்வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.பேரிடர் மேலாண்மையிடம் இருந்து அறிவிப்பு வரும் வரை மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர் மற்றும் இரவு வீசிய சூறைக்காற்றால் சேதமடைந்த பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
மதம் கொண்ட கஜாவால் இன்று தமிழகத்தில் 23 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அதில் 18 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…