மத பிடித்த கஜாவால்…தமிழகத்தில் 23 மாவட்ட அனைத்து பள்ளி ,கல்லூரிகளுக்கு இன்று (நவ.16) விடுமுறை..!!

Default Image

கஜா புயல் அதிதீவிர புயலாக மாறி தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நாகை, கடலூர், திருவாரூர் உள்பட 23 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  (16.11.2018) இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கஜா காலை தீவிர புயலாக மாறியுள்ள நிலையில் தமிழகத்தில்  கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம் நேற்றே விடுமுறை அறிவித்த நிலையில் தமிழகத்தில் அநேக இடங்களில் விடிய விடிய மழை பெய்து வருவதால் இன்று காலையில்  அரியலூர், சிவகங்கை, தேனி மற்றும் திருப்பூர்,  ,கரூர்,திண்டுக்கல்,விழுப்புரம் ,திருவண்ணாமலை,பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் திருச்சி, விருதுநகர், தூத்துக்குடி,சேலம் ,ஈரோடு,மதுரை ,கோவை ஆகிய மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

Image result for கடல் சீற்றம் கஜா

மேலும் நேற்றே கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உட்பட 7 மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் புயல் கரையை கடந்த பின்னரும் அங்கு பலத்த மழை பெய்து வருவதாகவும் பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

தன்னுடைய மத பலத்தை காட்டி வரும் கஜாவிற்கு இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர்.மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்துள்ளது.மேலும் வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாம்பன் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடல் உள்வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும்  மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.பேரிடர் மேலாண்மையிடம் இருந்து அறிவிப்பு வரும் வரை மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர் மற்றும் இரவு வீசிய சூறைக்காற்றால் சேதமடைந்த பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மதம் கொண்ட கஜாவால் இன்று தமிழகத்தில் 23 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அதில் 18 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை அளிக்கப்பட்டது.5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்