தமிழகத்தில் தாக்கிய புயல்களிலே மிக கொடூரமாக தாக்கி புயல் கஜாவாகும்.வர்தா சென்னையை தாக்கியது அதிகம் என்றால்.கஜா அதை விட கொடூரமானது.ஆம் வர்தா சென்னையை மட்டுமே தாக்கியது ஆனால் கஜா ஒட்டுமொத்த தமிகத்தையும் மிரட்டி எடுத்துவிட்டு சென்றுள்ளது.இன்னும் கஜா பாதிப்படைந்த மாவட்டங்களில் உள்ள ஊர்களில் கிராமங்களில் கதி என்னவென்று தெரியாமல் உள்ளது.
ஊடகங்களும் சென்னை போன்ற தலைநகரங்களில் வெள்ளம், புயல் ஏற்பட்ட போது ஊடகங்கள் பாதிப்புகளை மக்கள் இடத்தில் கொண்டு போய் சேர்த்தது.இதனால் மக்கள் துயரத்தில் ஆழ்ந்த மக்களின் கண்ணீரை துடைக்க அனைத்து மாவட்டங்களும் தங்களால் முடிந்த உதவிகளை அள்ளி கொடுத்தது.ஆனால் 4 மாவட்டத்தில் வரலாறு காணாத மழை புயல் சேதம் ஒரு மெழுகுவர்த்தி கூட அதிகமாக விற்கப்படும் அவலம் மின்துண்டிப்பு என அங்கு நிலவும் மையான அமைதி நம் காதை கிளிக்கிறது . எத்தனையோ வலிகளை உள்ளடக்கிய முகம் கேட்பார் யாருமில்லை என்கின்ற ஏக்கம் ஒரு பக்கம் என்றால் பிள்ளையை போல் வளர்த்த தென்னம்பிள்ளை புயலால் சாய்ந்து கிடப்பதை பார்த்து கதறி அழும் கூக்குரல் கேட்போரை, பார்ப்போரை நெஞ்சை உலுக்கி கண்ணில் கண்ணீரை வரவைக்கிறது.
இப்படி அங்கு நிலவும் அசாதராண சூழ்நிலை,தனித் தீவாக தத்தளிக்கு 4 மாவட்டங்களும்,அதன் உட்கிராமங்களும் இன்னும் மலைவாழ் பழங்குடி மக்களின் கதி என்னவென்று தெரியாமல் உள்ளது.இப்படி தமிழகமே ஒன்றினைந்து மீட்டு வர வேண்டிய டெல்டாவை பற்றிய பாதிப்புகளை,உண்மைகளை மக்களின் பார்வைக்கு காட்ட தவறிவீட்டது என்று மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.இப்படி கதறும் குரலும்,ஏங்கும் கண்களும்,வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிய நிலை என்று துயரித்தில் சிக்கி தவித்து வரும் நம் உறவுகள்களுக்கு உதவும் நோக்கில் இளைஞர்களும்,மக்களும் கரம் கொடுத்து வருகின்றனர்,அரசியல்வாதிகளும் மேலும் நடிகர்களும் கரம் நீட்டி வருகின்றனர்.இந்நிலையில் நாட்டுப்புற இசைக்கலை பெருமன்றத்தில் உள்ள நலிந்த கலைஞர்கள் அதாவது இவர்களே அன்றாட கூத்து நடத்தி தங்கள் வாழ்க்கையை நடத்தி வரும் நலிந்த கலைஞர்கள் கஜாவின் கோர பாதிப்பிற்கு தங்கள் முடிந்த கரத்தை எங்கள் உறவுகளுக்கு அளிப்போம் என்று தெருக்கூத்து நடத்தி வருகின்றனர்.
அவ்வாறு நடத்தப்படும் தெருக்கூத்தால் கிடைக்கு வருவாயை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதி வழங்க உள்ளனர்.இந்த மனிதநேயம் கொண்ட அன்பர்கள் மதுரை மாவட்டத்தில் உள்ள நாட்டுப்புற இசைக்கலை பெருமன்றம் சார்பாக தெருக்கூத்து நடத்தப்பட்டது.இதில், நலிந்த நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் பங்கேற்று நிதி திரட்டி அதில் வரும் வருவாயை மக்களுக்கு அர்பணிக்க உள்ளனர்.
மதுரை மாட்டுத்தாவணியில் தொடங்கிய இந்த நிதி திரட்டும் பணி, இன்று மாலை திருப்பரங்குன்றத்தில் நிறைவடைகிறது.தனக்கு சோறு போட்ட நெஞ்சங்களை மறவாமல் அவர்களுக்கு ஒரு வேளை சோறு போட வேண்டும் என்று நினைத்து தெருவில் தெருக்கூத்து நடத்தும் இந்த கலைஞர்களை எண்ணி உள்ளம் மகிழ்ச்சி கொள்கிறது.ஏனென்றால் இன்னும் மவுனமாக எத்தனையோ பேர் உள்ள நிலையில் ஏதோ தங்கள் முடிந்த உதவி எம் உறவுகளுக்கு என்று கூறும் இவர்கள் நமக்கெல்லாம் உதாரணம்.
உணவளித்தவர்கள் இன்று உணவில்லாமல் உருகி கொண்டிருக்கிறார்கள் வாருங்கள் உறவுகளே….. நுழைய முடியாத இடங்களிலும் நாம் நுழைவோம் சென்று உதவுவோம்.பரிதவிக்கும் நம் உறவுக்கு பாதுகாக்க உங்கள் உறவுகள் இருக்கிறோம் என்று உரக்க சொல்வோம்..!
DINAUVADU
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…