#Breaking:திருமண மண்டபங்களுக்கு போடப்பட்ட திடீர் உத்தரவு – மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் அறிவிப்பு!
சென்னை:திருமண முன்பதிவுகள் குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சியிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று திருமண மண்டபங்களுக்கு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது,குறிப்பாக தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2,731 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக மருத்துவத்துறை தெரிவித்தது. அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் மட்டும் ஒரே நாளில் 1,489 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில்,கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில்,திருமண முன்பதிவுகள் குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சியிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று திருமண மண்டபங்களுக்கு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
கோயில்கள்,சமூக நல கூடங்கள்,ஹோட்டல்களில் நடைபெறும் திருமண நிகழ்வுகளையும் முன்னரே தெரிவிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி,திருமண முன்பதிவுகளை சென்னை மாநகராட்சியின் இணையதளம் வாயிலாக முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக,திருமண நிகழ்வுகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ககன்தீப் சிங் பேடி அவர்கள் தெரிவித்துள்ளார்.