செட்டிநாடு குழும நிறுவனத்தில் 3ம் நாளாக அமலாக்கத்துறை சோதனை.!

செட்டிநாடு குழுமம் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்றும் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை எழும்பூரில் உள்ள செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான இடத்தில் அமலாக்கத்துறையினர் 3-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
செட்டிநாடு குழுமம் வெளிநாட்டில் ரூ.110 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் வாங்கியதற்கான ஆவணங்களும், பல்வேறு வங்கிகளில் நிரந்தர வைப்புத்தொகை வைத்ததற்கான ஆதாரத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2020ல் வருமான வரி சோதனையில் ரூ.23 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ரூ.700 வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படுகிறது. சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செட்டிநாடு குழுமத்தின் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் எஃப்.ஐ.ஆர் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
எனவே, செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான 6க்கும் மேற்பட்ட இடங்களில் மூன்றாம் நாளாக இன்று சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழிசையின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய அமித் ஷா.!
April 11, 2025