டிசம்பர் 19-ஆம் தேதி முதல் திறந்தவெளியில் அரசியல், மத, கலாசார பொழுதுபோக்கு கூட்டங்களை நடத்தலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அளித்தது. அதன்படி, சுற்றுலா தளங்கள் மற்றும் கடற்கரை போன்றவைகள் நேற்று முன்தினம் முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் இதுவரை திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. அதேசமயம் அரங்குகளில் அரசியல், மத கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கில் மேலும் கூடுதல் தளர்வுகள் அளித்து, முதல்வர் பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், டிசம்பர் 19-ஆம் தேதி முதல் திறந்தவெளியில் அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, மதம்சார்ந்த கூட்டங்களை நடத்தலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியை பின்பற்றி 50% பங்கேற்பாளர்களுடன் கூட்டங்களை நடத்திக் கொள்ளலாம். அதேசமயம் மாவட்டங்களில் ஆட்சியர்களிடமும், சென்னையில் மாநகர காவல் ஆணையரிடமும் அனுமதி பெறுவது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…
ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…