பரபரப்பு.! மருத்துவர் கட்டாயப்படுத்தியதால் உயிரிழந்த பெண்.!

- பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- குடும்பத்தினர்கள் எதிர்ப்பையும் மீறி மருத்துவர்கள் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை அளித்ததே உயிரிழப்புக்கு காரணம்.
திருவண்ணாமலை உள்ள செய்யாறு அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையால் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வினித்ரா என்ற பெண் பிரசவத்திற்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு சுக பிரசவம் இல்லாமல் அறுவை சிகிச்சை மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், வினித்ரா குடும்ப கட்டுப்பாடு வேண்டாம் என கூறியும், அதற்கு மருத்துவர்கள் கட்டாயப்படுத்தி குடும்ப கட்டுப்பாடு செய்ததில் உயிரிழந்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதா? என கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இதனையடுத்து மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் குடும்பத்தினர்கள் எதிர்ப்பையும் மீறி மருத்துவர்கள் வினித்ராவுக்கு குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை அளித்ததே உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.