விருதுநகரில் சிப்காட், தூத்துக்குடியில் பர்னிச்சர் பூங்கா வரவுள்ளது – அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழகத்தில் முதலீடு செய்ய பல தொழிலதிபர்கள் முதல்வரை சந்தித்து வருகின்றனர் என தொழித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியில் தமிழக அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதலீடு செய்ய பல தொழிலதிபர்கள் முதல்வரை சந்தித்து வருகின்றனர். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பற்றி ஆய்வு செய்து வருகிறது என கூறினார்.
மேலும், விருதுநகரில் சிப்காட், தூத்துக்குடியில் பர்னிச்சர் பூங்கா ஆகியவை வரவுள்ளது என தெரிவித்தார்.