நாளை காலை 11 மணிக்குள் மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழப்பு மற்றும் உடல் ஒப்படைப்பு தொடர்பாக இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது, மாணவியின் உடல் மறு கூராய்வு உத்தரவில் உச்சநீதிமன்றம் தடையிடாததால் ஏற்கனவே, உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற போவதில்லை. மாணவியின் உடலை வைத்து பந்தயம் கட்டாதீர்கள் என உயர்நீதிமன்றம் நீதிபதி பெற்றோருக்கு அறிவுறுத்தினார்.
நீதிமன்றம் உத்தரவிட்டும் மாணவியின் உடலை பெற்றுக்கொள்வதில் ஏன் தாமதம், ஒவ்வொரு முறையும் ஏன் பிரச்சனை ஏற்படுத்துகிறீர்கள் எனவும் கேள்வி எழுப்பினார். பெற்றோரின் மீது நீதிமன்றம் அனுதாபம் கொள்வதகவும் கூறினார். நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளதா? இல்லையா? என பெற்றோருக்கு நீதிபதி சதீஷ்குமார் கேள்வி எழுப்பினார். இரண்டாவது உடற்கூராய்வின் போது புதிதாக எதையும் கண்டுபிடிக்கவில்லை என தடயவியல் துறை தெரிவித்தது.
இதனைத்தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாணவி உடல் கூராய்வு அறிக்கையை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவனை ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பிரேத பரிசோதனை அறிக்கைகளை 3 மருத்துவர்கள் அடங்கிய குழு ஆராய வேண்டும் என்றும் பிரேத பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவை ஜிப்மரில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார். மாணவியின் உடல் கூராய்வு அறிக்கை குறித்து பெற்றோர் அதிருப்தி தெரிவித்ததை அடுத்து நீதிபதி ஆணையிட்டார்.
கூராய்வு அறிக்கைகளை தகுந்த தடயவியல் நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்பின், உடல் கூராய்வு வீடியோ பதிவுகள் மற்றும் அறிக்கைகளை தரவேண்டும் என பெற்றோர் வேண்டுகோள் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. மாணவியின் உடலுக்கு கண்ணியமான முறையில் இறுதிச்சடங்குகளை நடத்துங்க, மகளின் ஆன்ம இளைப்பாறட்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார். மாணவி மரணத்தில் வேறு சிலர் ஆதாயம் தேடுகின்றனர், அது பெற்றோருக்கு தெரியாமல் நடந்துள்ளது என்றும் கூறியுள்ளனர்.
நாளை காலை 11 மணிக்குள் மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் உடலை பெற்றுக் கொள்வது தொடர்பாக மதியம் 12 மணிக்கு விளக்கமளிக்க மாணவி தந்தை தரப்புக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவியின் உடலை பெற்றுக் கொள்ளாவிட்டால் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். எனவே, நாளை நன்பகம் 11 மணிக்குள் உடலை பெற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன் எனவும் குறிப்பிட்டார்.
இதனிடையே பேசிய நீதிபதி, மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் சமூக ஊடகங்களில் முழுவதும் பொய்யை பரப்பியுள்ளனர். பெற்றோரிடம் அவர்கள் தரப்பு வழக்கறிஞர் பேசும்படி அறிவுறுத்தினார். வன்முறையில் கல்வி பாதித்த மாணவர்களை பற்றி எவரும் பேசவில்லை,கனியாமூர் பள்ளி வன்முறையால் 4,500 மாணவர்கள் பாதிப்பு மாணவர்களின் கல்வியை மீட்டெடுக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்ததை தொடர்ந்து, மாணவர்களின் கல்வியை மீட்டெடுப்பது குறித்து முதல்வர் ஆலோசித்துள்ளார் என அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
ரஷ்யா : ரஷ்யாவில் குறைந்து வரும் மக்கள் தொகையை சமாளிக்க புதிய அமைச்சகம் அமைக்க திட்டமிட்டு வருகிறார்கள். அதாவது,மூன்று ஆண்டுகளாக…
சென்னை : தவெக தலைவர் விஜய் மற்றும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானும் கசப்பை மறந்து மீண்டும் நட்பு பாராட்ட தொடங்கியுள்ளனர்.…
கிருஷ்ணகிரி :தமிழ்நாட்டில் இன்று (09-11-2024) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆம், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளியில் மதியம் 1.30 மணியளவில்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் (இரவு 10 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை…
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள கேம் சேஞ்சர் (Game Changer)…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் நிறைவடைந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக மீண்டும் தேர்வு…