தஞ்சையில் உயிரிழந்த மோப்ப நாய்க்கு 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் இறுதிச்சடங்கு…!

தஞ்சையில் குற்றங்களை துப்பறிவதில்,காவல்துறையினருக்கு மிகவும் உறுதுணையாக இருந்த மோப்ப நாய் உயிரிழந்ததையடுத்து, 21 குண்டுகள் முழங்க காவல்துறையினரின் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சையில் குற்றங்களை துப்பறிவதில்,காவல்துறையினருக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வந்த ராஜராஜன் என்ற மோப்ப நாய் உயிரிழந்துள்ளது. இந்த மோப்பநாய் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்துள்ளது. இந்த மோப்ப நாய் தஞ்சையில் நடைபெற்ற கொலை, கொள்ளைகளில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
இதனையடுத்து,ராஜராஜனின் உடல் துப்பறிவு பிரிவு அலுவகத்தில் வைக்கப்பட்டது. அதற்கு காவல்துறையினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின் 21 குண்டுகள் முழங்க காவல்துறையினரின் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.