கேப்டன் விஜயகாந்த் இறுதி ஊர்வலம் செல்லும் பாதை.!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி கேப்டன் விஜயகாந்த்தின் உயிர் பிரிந்தது. விஜயகாந்த் மறைவை அறிந்த செய்தி கேட்டு அவரது குடும்பத்தினர், தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் என அனைவரது மனதையும் வெகுவாக பாதித்தது.

தற்பொழுது அவருடைய உடல் சென்னை, அண்ணாசாலையில் காலை 6.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அங்கு திரளான தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதே போல சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களும் கேப்டன் விஜயகாந்திற்கு தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

கேப்டன் விஜயகாந்த் நினைவுகள் 1952…2023.!

மறைந்த விஜயகாந்தின் உடல் மதியம் 1 மணியளவில் ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இதற்காக தீவுத்திடலில் இருந்து வெளியே வந்து மன்ரோ சிலை, பல்லவன் சிக்னல், அங்கிருந்து வலதுபுறம் திரும்பி சென்ட்ரல் ரயில் நிலையம், அங்கிருந்து இடதுபுறம் திரும்பி ரிப்பன் மாளிகை, எழும்பூர் வடக்கு வாசல், கீழ்ப்பாக்கம், அமைந்தகரை, அரும்பாக்கம் வழியாக ஊர்வலம் கோயம்பேடு சென்று சேரும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்