குரங்கணி காட்டுத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் ரூபாய் நிதியுதவி!
தேனி குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சென்னை வேளச்சேரியை சேர்ந்த நிஷா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியின் கொழுக்கு மலைக்கு திருப்பூரில் இருந்தும் சென்னையில் இருந்தும் 26 பெண்கள், 8 ஆண்கள், 3 குழந்தைகள் உள்பட 40 பேர் இரு குழுக்களாக சென்றுள்ளனர். இவர்கள் இன்று திங்கள்கிழமை திரும்ப திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குரங்கணி காட்டுத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்க் தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.