அதிமுக கூட்டணியில் உள்ள தமாகா ,தற்போதைய முதலமைச்சர் பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அதிகாரபூர்வமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.நீண்ட நாட்களாக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து முடிவு எடுப்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில் பல கட்ட ஆலோசனைக்கு பின்னர் பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனிடையே அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும். தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் அதை பாஜக தான் அறிவிக்கும் என்று கூறினார்.முருகனை தொடர்ந்து பாஜகவின் தலைவர்களான வானதி சீனிவாசன்,அண்ணாமலை,ஹெச்.ராஜா உள்ளிட்டோர் இதே கருத்தை கூறி வருகின்றனர்.ஏற்கனவே அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களது பேச்சுக்கள் அதிமுக -பாஜக கூட்டணி இடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு அதிமுகவினரும் பதில் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள தமாகா ,தற்போதைய முதலமைச்சர் பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டுள்ளது.இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கவுள்ளோம்.கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடிபழனிசாமி அவர்களுக்கு முழுஆதரவு அளிக்கிறோம்.தமாகா எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டது என்று தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…