பெரம்பலூரில் மறுஉத்தரவு வரும்வரை நீட்டிக்கப்படும் முழு பொதுமுடக்கம்!
பெரம்பலூரில் மறுஉத்தரவு வரும்வரை முழு பொதுமுடக்கம் நீட்டிக்கப்படும்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெரம்பலூர் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள 8 கிமீ அளவுக்கு முழு பொதுமுடக்கத்தை இன்று வரை அம்மாவட்ட ஆட்சியர் அமல்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அறிவித்த பொதுமுடக்கம், மறு உத்தரவு வரும்வரை நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, உழவர்சந்தை, காய்கறி மார்க்கெட், இறைச்சிக் கடைகள் ஆகியவை திறக்க தடை நீட்டிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. சூப்பர் மார்க்கெட் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், டோர்டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் நகராட்சி சார்பில், 54 வாகனங்களில் காய்கறிகள் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறிய மளிகை கடைகள் மதியம் 1 மணிவரை திறந்திருக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.