Corona lockdown : காய்கறி வாங்க சென்ற மக்களுக்கு அருண்ராஜா காமராஜாவின் கவிதை

Default Image

முழு ஊரடங்கினால் காய்கறி வாங்க சென்ற மக்களுக்கு அருண்ராஜா காமராஜாவின் கவிதை.

கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் உயரந்து வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் கொரோனா வைரஸால் 24,942 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 779 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை, மதுரை, கோவை, திருப்பூர்,நாகை மற்றும் சேலம் என சில மாவட்டங்களில் நாளை முதல் முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அடுத்த 4 நாட்கள் மூடப்படும் என்பதால் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் முகக்கவசம் அணியாமலும் தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டம் கூட்டமாக அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர். மக்களின் முட்டாள் தானமான செயலால் திரைப்பட நடிகர்கள் மற்றும் பலர் விமர்சித்து வருகின்றனர்

அந்தவகையில் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் “உலகின் கடைசி நாளென் றெண்ணி கூட்டமாய் கூடுகிறீர்
இதயம் கனக்குது அந்தோ
தக்காளி பத்து கிலோ தரிசான
உள்ளத்தின் அறியாமை கோடி கிலோ
எதற்கும்மை தனித்திருக்க
கோருதோ அரசு
அதையே நீ கூடிப் பெறுவாய்
என்றெனும் சிந்தனை விடுத்து புற்றீசல் போல் மொய்த்து உன்குடி நம்பும் உறவுகளைக் கொல்லாதீர் ????” என்று ட்விட் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Lottery Martin - Kanguva
childrens day (1)
rinku singh
Vaiko - Apollo Hospital
doctor balaji
Rajeev gandhi co-operative hospital
kanguva review