கோவை மாவட்டத்தில் 3 நாட்களுக்கு முழு முடக்கம் அறிவிப்பு.!
கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் நாளை மாலை முதல் திங்கட்கிழமை வரையில் முழு ஊரடங்கு அமல்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த சில நாள்களாக தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, 5-ஆயிரத்தை தாண்டி வருகிறது.
இதனால், கொரோனா அதிகம் உள்ள சில பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோயம்புத்தூரில் நாளை மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மளிகைக்கடை,இறைச்சி கடிகளுக்கு அனுமதி கிடையாது. ஊரடங்கின் போது தேவையின்றி வெளியே செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
கோவை மாவட்டத்தில் 3 நாட்களுக்கு முழு முடக்கம் அறிவிப்பு.!#கோவை #coronavirus #COVID19Pandemic pic.twitter.com/IxJCPPC4t6
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) July 24, 2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6, 785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. சென்னையில் 1, 299 பேருக்கு தொற்று உறுதி. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1, 99, 749 பேர்களில் 1, 43, 297 பேர் பூரண குண்மடைந்து வீடு திரும்பியுள்ளனர்.