ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் 815 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் முழு விவரம் வெளியானது!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை என 815 பக்கங்கள் கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அந்த தீர்ப்பின் முழு விவரம் வெளியானது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2018- ம் ஆண்டு, மே 22-ல் நடைபெற்ற ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தியதில், 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, 2018 மே 28- ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
இதனையடுத்து வேதந்தா நிறுவனம், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்பொழுது ஸ்டெர்லைட் அலையை திறக்க திறக்க அனுமதியில்லை என்று 815 பக்கங்கள் கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் அந்த வழக்கினை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிந்ததும், தூத்துக்குடியில் மக்கள் வெடி வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இதற்கு பல அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் 815 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் முழு விவரம் வெளியானது. அதில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்ற அரசின் முடிவு நியாயமானது என அந்த தீர்ப்பின் விபரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025