பிரதமர் மோடியின் 2 நாள் தமிழக பயணம்… திருப்பூர், தூத்துக்குடி, நெல்லை முழு விவரம்…
பிரதமர் மோடி இன்றும் நாளையும் தமிழகத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டு கட்சி பொதுக்கூட்டம் மற்றும் மக்கள் நலத்திட்ட நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் கலந்து கொள்ள உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகள், பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.
திருவனந்தபுரம் :
இன்று காலை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி நிலையத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் பிற்பகல் 2 மணி அளவில் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு செல்ல உள்ளார்.
பொதுக்கூட்டம் :
பின்னர் கோவை விமானப்படை தளத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடதிற்கு சாலை மார்க்கமாக வருகிறார். அங்கு மாதாபூரில் பாஜக சார்பில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
ராமேஸ்வரத்தில் கடந்த ஆண்டு மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வந்த என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா மாதாப்பூரில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.
Read More – 554 ரயில் நிலையங்கள்… 1,500 ரயில்வே மேம்பாலங்கள் திட்டப்பணிகள்.! பிரதமர் மோடி துவக்கம்.!
மதுரை பயணம் :
இதனை அடுத்து பல்லடத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்கிறார் பிரதமர் மோடி. அங்கு வீரபஞ்சன் டிவிஎஸ் பள்ளியில் நடைபெறும் சிறு குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக கெட்ட கருத்தரங்கில் பங்கேற்கிறார். இந்த கருத்தரங்கில் சிறு குறு தொழில் முனைவோர் பலர் பங்கேற்க உள்ளனர். சிறு தொழில் முனைவோருக்கான நலத்திட்ட உதவிகளை பிரதமர் மோடி இந்த நிகச்சியில் தொடங்கி வைக்கிறார்.
அதன் பிறகு இன்று இரவு மதுரை தனியார் ஹோட்டலில் தங்குகிறார் பிரதமர் மோடி. அங்கே முக்கிய கட்சி நிர்வாகிகளை பிரதமர் சந்திக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Read More – நாடாளுமன்ற தேர்தல்..! ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா மனைவி போட்டி
தூத்துக்குடி பயணம் :
நாளை காலை மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடிக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி அங்கு சுமார் 17,000 கோடி அளவில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க உள்ளார்.
தூத்துக்குடியில் தொடங்கி வைக்கப்பட உள்ள நலத்திட்டங்கள் என்னவென்றால், தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் வெளி துறைமுக சரக்குப் பெட்டக முனையத்திற்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். வ.உ.சி துறைமுகத்தை நாட்டின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் துறைமுகமாக மாற்றும் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி துவங்கி வைக்க உள்ளார்.
கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை, ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை மற்றும் பதுங்கு குழி வசதி போன்ற பல்வேறு திட்டங்கள் துவக்கிவைக்கப்பட உள்ளன . இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் , இந்தியாவின் முதலாவது உள்நாட்டு பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் செல் தூத்துக்குடியில் இயங்கும்.
Read More – நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டிற்கு வருகை தரவுள்ள 25 கம்பெனி மத்திய ஆயுதப் படையினர்
ரயில் திட்டங்கள் :
இந்த நிகழ்ச்சியின் போது, 1477 கோடி ரூபாய் செலவிட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள வாஞ்சி மணியாச்சி – நாகர்கோவில் ரயில் பாதை, வாஞ்சி மணியாச்சி – திருநெல்வேலி பிரிவு மற்றும் மேலப்பாளையம் – ஆரல்வாய்மொழி ஆகிய வழித்தடத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள ரயில்பாதை திட்டங்களைப் பிரதமர் மோடி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார்.
சாலைப்பணிகள் :
மேலும், சுமார் ரூ.4,586 கோடி செலவில் தமிழகத்தில் 4 சாலைத் திட்டங்களைப் பிரதமர் மோடி துவங்கி வைக்க உள்ளார். ஜித்தண்டஹள்ளி-தர்மபுரி நான்கு வழிப்பாதை, மீன்சுருட்டி-சிதம்பரம் இருவழிப்பாதை, ஒட்டன்சத்திரம்-மடத்துக்குளம் நான்கு வழிப்பாதை, நாகப்பட்டினம்-தஞ்சாவூர் இருவழிப்பாதை ஆகிய சாலைகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைக்க உள்ளார்.
இதனை அடுத்து, நாளை பகல் 12 மணி அளவில் பிரதமர் மோடி நெல்லை செல்கிறார். அங்கு நடைபெறும் பாஜக கட்சி சார்பில் நடத்தப்படும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.