திருவாரூரில் நாளை முழு ஊரடங்கு – ஆட்சியர் அறிவிப்பு
திருவாரூரில் நாளை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது.இதன் விளைவாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்றாக மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2526 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் திருவாரூரில் நாளை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.மேலும் மருந்தகங்கள், பால் கடைகள் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.