ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு…! 16 சிறப்பு ரயில்கள் ரத்து…! – தெற்கு ரயில்வே
ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கம் என்பதால், நாளையும் மே 2-ஆம் தேதியும் 16 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது வலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்து உள்ள நிலையில், திங்கள் முதல் சனி வரை இரவு இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு அரசு அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கம் என்பதால், நாளையும் மே 2-ஆம் தேதியும் 16 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை கோட்டத்தில் இருந்து இயக்கப்படும் திருச்சி – காரைக்குடி சிறப்பு ரயில், மதுரை – விழுப்புரம் சிறப்பு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை – புதுச்சேரி, திருச்சி – கரூர் வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில் நிலையங்களில், முன்பதிவு நிலையங்கள் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.