ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு…! எவையெல்லாம் இயங்கும்..? இயங்காது…?

Published by
லீனா

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நாளில் எவையெல்லாம் இயங்கும்? எவையெல்லாம் இயங்காது?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், பல புதிய கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தியுள்ளது.

அதன்படி திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்திருந்தது. அதன்படி சனிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி  வழங்கப்பட்டுள்ளது.

 எவற்றுக்கெல்லாம் அனுமதி கிடையாது:

  • முழு ஊரடங்கு நாளில், இறைச்சிக் கடைகள், மீன் கடைகள், காய்கறி கடைகள், டாஸ்மாக் மதுக்கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் அனைத்து கடைகளும் செயல்பட அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து சேவைக்கும், ஆட்டோ, டாக்சி ஆக்கியாவை இயங்க அனுமதி கிடையாது.
  • நாளையும், தேர்தல் வாக்குபதிவு நாளான மே 2-ஆம் தேதியும் 16 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

எவற்றுக்கெல்லாம் அனுமதி :

  • அத்தியாவசிய பணிகளான பால் வினியோகம், பத்திரிகை வினியோகம்,  மருத்துவம் சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • சில குறிப்பிட்ட தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • முழு ஊரடங்கு நாளில் திருமண விழாக்களில் 100 பேரும், இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் 50 பேர் மிகாமல் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களுக்கு செல்பவர்கள் ஆட்டோ, டாக்ஸி பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்திருந்தாலும், பயணம் தொடர்பான டிக்கெட்டுகளை வைத்திருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அத்தியாவசிய பணிகள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் அதற்குரிய அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.
Published by
லீனா

Recent Posts

வார் 2 திரைப்படம் எப்போது வெளியீடு! ஹிருத்திக் ரோஷன் கொடுத்த அப்டேட்!

வார் 2 திரைப்படம் எப்போது வெளியீடு! ஹிருத்திக் ரோஷன் கொடுத்த அப்டேட்!

டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…

1 hour ago

இல்லாத அளவிற்கு உயர்ந்த தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி! முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…

2 hours ago

லக்னோவுக்கு எதிராக மும்பை தோல்வி! கதறி அழுதாரா ஹர்திக் பாண்டியா?

லக்னோ :  நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…

4 hours ago

வரிக்கு பதிலடி கொடுத்த சீனா “அவுங்க பயந்துட்டாங்க” டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…

5 hours ago

இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!

சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…

6 hours ago

டெல்லியை எதிர்கொள்ளும் சென்னை…காத்திருக்கும் முக்கிய சவால்கள்!

சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…

6 hours ago