#BREAKING: தமிழகத்தில் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ..!
தமிழகத்தில் எவ்வித தளர்வுகளும் இன்றி நாளை மறுநாள் முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமலாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் இரவு 10 முதல் காலை 4 மணி வரை இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் உள்ள நிலையில், மேலும், கொரோனா பரவல் அதிகரித்ததால் கடந்த 10-ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வருகின்ற 24-ஆம் தேதி அதிகாலை 4 மணியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிப்பதா..? அல்லது சில தளர்வுகள் கொடுப்பதா..? என்பது குறித்து இன்று மருத்துவ குழுவினருடனும், சட்டமன்ற கட்சி குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை இரண்டு வாரம் அமல்படுத்தவும், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும் மருத்துவக்குழு தமிழக அரசுக்கு பரிந்துரை வழங்கியது.
பின்னர், சட்டமன்ற கட்சி குழுவுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலனை செய்யும் என தெரிவித்தார். இந்நிலையில், தமிழகத்தில் எவ்வித தளர்வுகளும் இன்றி நாளை மறுநாள் முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமலாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் நலன் கருதி இன்று இரவு 9 மணி வரையிலும், நாளை ஞாயிறு ஒரு நாள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
#BREAKING | தமிழகத்தில் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு #Dinasuvadu #lockdown #curfew pic.twitter.com/6YqEE17mDb
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) May 22, 2021