கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கில் ஒரு சில தளர்வுகளும் அளிக்கப்பட்டது. ஆனாலும், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோன பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இதன் பின் தமிழகத்தில் ஜூலை மாதம் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என அரசு அறிவித்தது.
இதனைதொடர்ந்து, தமிழக முழுவதும் எவ்வித தளர்வுமின்றி, ஞாயிற்றுக்கிழமைகளில் (05.07.2020, 12.07.2020, 19.07.2020, 26.07.2020) முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என அறிக்கை வெளியிடப்பட்டது.இதனால் இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று அத்தியாவசிய தேவைகளான பால் கடை, மருந்தகங்கள் மட்டுமே இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகைக் கடைகள், உணவகங்கள் உட்பட அனைத்து கடைகளும் மூடி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…