தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு? – வெளியான தகவல்!
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,செயலாளர் ராதாகிருஷ்ணன்,சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில்,தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டால் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகளுக்கு அனுமதி இல்லை என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்,கடைகளுக்கான நேரக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட தமிழகத்தில் அமலாக உள்ள புதிய கட்டுப்பாடுகளுக்கான அறிவிப்புகள் இன்று எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.