#BREAKING: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு- அமைச்சர் அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தற்போது கொரோனா மட்டும் ஓமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஓமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 120 மேற்பட்டோர் பாதிக்கப்ட்டுள்ளனர்.
இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன்,சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதைதொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாகவும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமை அன்று கொரனோ தடுப்பூசி முகாம்கள் நடைபெறும். மேலும், பள்ளி, கல்லூரிகள் வழிபாட்டுத் தலங்களில் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவித்தார்.