தமிழகத்தில் முழு ஊரடங்கு….! ஆட்டோக்கள், டாக்சிகள் இயங்காது…!
தமிழகத்தில் மாவட்டங்களுக்கும் மற்றும் மற்ற மாவட்டங்களுக்கு இடையேயான அரசு, தனியார் பேருந்துகள், வாடகை ஆட்டோ, டாக்சிகள் உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2-வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த, புதியதாக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாப்களின் அவர்கள் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் மே 10ம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மாவட்டங்களுக்கும் மற்றும் மற்ற மாவட்டங்களுக்கு இடையேயான அரசு, தனியார் பேருந்துகள், வாடகை ஆட்டோ, டாக்சிகள் உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்திவாசிய பயணங்களான திருமணம், இறப்பு, மருத்துவம் சார்ந்த பயனர்களுக்கு உரிய ஆவணங்களுடன் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.