தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு என்று வெளியாகும் தகவல் வதந்தி என்று முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சில தளர்வுகளுடன் தற்போது நடைமுறையில் உள்ளது.இந்நிலையில் இன்று மேட்டூர் அணையை திறந்து வைத்த பின்னர் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.அவர் பேசுகையில், தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு என்று வெளியாகும் தகவல் வதந்தி.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் வந்துள்ளது தவறான செய்தி, அதனை வெளியிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை மக்கள் அதுவும் குறிப்பாக சென்னை மக்கள் பின்பற்றினால் தொற்று பரவாது. கொரோனா தொற்று சகஜ நிலைக்கு வந்த பிறகு கல்வித்துறை சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பள்ளிகள் திறப்பு குறித்து மத்திய அரசு அறிவிக்கும் அதனை தொடர்ந்து தான் தமிழக அரசு முடிவு செய்யும்.நோயின் வீரியத்தை மக்கள் புரிந்துக் கொள்ளாதது வேதனை அளிக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
சென்னை: இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்த…
சென்னை : ஒருபக்கம் அரசியல் சட்டத்துக்கு விழா மறுபுறம் அம்பேத்கருக்கு அவதூறு என்பதே பாஜகவின் பசப்பு அரசியல் என விமர்சித்தும்,…
டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று குவைத் புறப்பட்டுச் சென்றார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் கந்தசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த…
ஆந்திரா: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் யண்டகண்டி என்ற பகுதியில் வசிக்கும் துளசி என்ற பெண்ணின் வீட்டிற்கு வந்த…
சென்னை : வந்துச்சே வசூல் மழை தான்...வந்துச்சே வசூல் மழை தான்... என்கிற அளவுக்கு புஷ்பா 2 திரைப்படத்தின் வசூலானது…