இன்று முதல் நத்தம் பகுதியில் முழு ஊரடங்கு .! அமைச்சர் வேலுமணி.!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 3,500 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டது. இதனால், தமிழகத்தில் குறைவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் இன்று முதல் ஜூலை 20-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அமைச்சர் வேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்” திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி & கிராமப் பகுதிகளில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஜூலை 11 முதல் ஜூலை 20 வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பால் & மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்படும். இதற்கு அனைத்து வியாபாரிகளும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025
“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!
April 25, 2025