குடியாத்தம் நகராட்சியில் முழு ஊரடங்கு அமல்.!
குடியாத்தத்தில் 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த சில நாள்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, 4-ஆயிரத்தை தாண்டி வருகிறது.
இதனால், கொரோனா அதிகம் உள்ள சில பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்,வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் கொரோனா அதிகரித்து வருவதை தொடர்ந்து, குடியாத்தம் நகராட்சியில் 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முழு ஊரடங்கு வரும் 24-ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் 31-ஆம் தேதி வரை அமல்படுத்ததப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.