நாளை முதல் முழு ஊரடங்கு: காவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி அறிவுரை!!
கொரோனா பரவல் காரணமாக தமிழக்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலில் வரவுள்ளதால், காவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி அறிவுறுத்தல்.
தமிழகத்தில் நாளை முதல் 24ம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உள்ளன. இந்த நிலையில், முழு ஊரடங்கில் காவல்துறையினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் டிஜிபி திரிபாதி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, பொதுமக்களிடம் காவல்துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும்.
எந்த சூழ்நிலையிலும் கோபமாகவோ, மரியாதையை குறைவாகவோ மக்களிடம் நடந்துகொள்ளக்கூடாது. மார்க்கெட் போன்ற இடங்களில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை ஒலிபெருக்கி பயன்படுத்தி தவிர்க்க வேண்டும். தடியடி நடத்தி அல்லது பலப்பிரயோகம் செய்து கூட்டத்தை கலைப்பது போன்ற செயல்களில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது என தெரிவித்துள்ளார்.