உளுந்தூர்பேட்டையில் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு..!

உளுந்தூர்பேட்டையில் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது, மேலும் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, மேலும் கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்டோர் மாவட்டமாக சென்னை உள்ளது, மேலும் செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை, வேலூர், போன்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை சில தினங்களாகவே அதிகரித்து தான் வருகிறது, இந்நிலையில் இதனை கருத்தில் கொண்டுவியாபார சங்க கூட்டத்தில் உளுந்தூர்பேட்டையில் இன்று ஜூலை 16ம் தேதி முதல் ஜூலை 19ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தபடும் என்று முடிவு செய்துள்ளனர்.