தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிப்பு..! எவற்றிற்கெல்லாம் அனுமதி…!

Default Image

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், எவற்றிற்க்கெல்லாம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2 வாரங்கள் பொது முடக்கம் அமலில் இருந்த நிலையில், மீண்டும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் எவற்றுக்கெல்லாம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது பற்றி பார்ப்போம்.

  • தலைமை செயலகத்திலும், மாவட்டங்களிலும் அத்தியாவசிய துறைகள் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர் வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  • மின்னணு சேவை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும்.
  • உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. swiggy , zomato போன்ற மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டுமே உணவு விநியோகம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
  • பெட்ரோல், டீசல் பங்குகள் வழக்கம்போல் இயங்கும்.
  • ஏடிஎம் மற்றும் அதற்கான சேவைகள் அனுமதிக்கப்படும்.
  • வேளாண் விளைபொருட்கள் மட்டும் இடு பொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும்.
  • சரக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும்.
  • உரிய மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவுடன் அனுமதி அளிக்கப்படும்.
  • மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்துக்குள் பயணிக்க இப்பதிவு தேவையில்லை.
  • செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கலாம்.
  • தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள், அத்தியாவசிய பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி அனுமதிக்கப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
sarathkumar
Thirukarthigai (1)
ipl 2025 yuvraj singh
rahul gandhi helicopter
appam (1) (1) (1)
amaran ott release date