கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை, கோவை, மதுரை போன்ற மாநகரில் வரும் 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதாவது, 29 ஆம் தேதி இரவு 9 மணி வரை இந்த முழு ஊரடங்கு இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். இந்த முழுமையான ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள மட்டுமே அனுமதி என்றும் மருத்துவமனை, மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகளுக்கு மட்டுமே அனுமதி என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் விதிமுறைகளின்படி செயல்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுபோன்று சேலம், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ( இரவு 9 மணி வரை) 3 நாட்களுக்கு முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். இதனிடையே தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் பாதிப்பு எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. இதுவரை 1,683 பேர் பாதிக்கப்பட்டு, 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். இந்த ஊரடங்கை மீறுபவர்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…