#BREAKING: மீண்டும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு -தமிழக அரசு..!
வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் இன்றுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச்செயலகத்தில் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதற்கிடையில், கடந்த வார ஞாயிற்றுக்கிழமை போல இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா..? என்ற கேள்வி எழுந்த நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு தடையில்லை எனவும் வார இறுதி நாட்களில் போடப்படும் ஊரடங்கு மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் என அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.