முழு அடைப்பு போராட்டம் – ஆதரவளித்தோருக்கு பாமக தலைவர் நன்றி!
கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார் அன்புமணி ராமதாஸ்.
என்எல்சியை கண்டித்து கடலூரில் பாமக சார்பாக முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் பாதுகாப்பிற்காக 7,000 போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. இன்று காலை முதல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று நிறைவடைந்தது.
இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளித்தவர்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார். வணிகர் நல அமைப்புகள், உழவர் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தரப்புக்கும் நன்றி தெரிவித்தார். என்எல்சி நிறுவனத்தை கடலூரை விட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேல்கோளா வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.