மின் உற்பத்தியை அதிகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்.
திமுக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர், கூறுகையில், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கீடு செய்து, மின் கட்டணம் வசூல் செய்வதால் 200 யூனிட் மற்றும் 300 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு மின் கட்டணம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகமாக மின் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க மாதம் ஒருமுறை மின் உபயோகம் கணக்கிடப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேலும் கோடை காலம் ஆரம்பித்துவிட்டதால் மின் உபயோகம் அதிகமாகும். இதனால் மின்தடை ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் உற்பத்தியை அதிகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…