#BREAKING: தப்பியோடிய சிவசங்கர் பாபா டெல்லியில் கைது ..!
உத்தரகண்ட் டேராடூன் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய சிவசங்கர் பாபா டெல்லி காசியாபாத்தில் கைது செய்யப்பட்டார்.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்படும் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடந்த 11 ஆம் தேதி சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.
இதனையடுத்து, சென்னையில் உள்ள குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில், சுசில் ஹரி பள்ளி நிர்வாகிகள் நாகராஜன், வெங்கட்ராமன் உட்பட 3 பேர் நேரில் ஆஜராகினர். ஆனால், சிவசங்கர் பாபா உட்பட 3 பேர் ஆஜராகவில்லை. காரணம், மாரடைப்பால் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிவசங்கர் பாபா அனுமதிக்கப்பட்டிருப்பதனால், அவருக்கு பதிலாக வழக்கறிஞர் ஆஜராகினர்.
இதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில் கேளம்பாக்கம் போலீசார் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு சிபிசிஐடி தனிப்படை போலீசார் விசாரணைக்காக உத்தரகண்ட் டேராடூன் சென்றபோது தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். மாரடைப்பு ஏற்பட்டதாக கூறிய மருத்துவமனையில் சேர்ந்த சிவசங்கர் பாபா சிபிசிஐடி வருவதை அறிந்து மருத்துவமனையில் தப்பி ஓடினார். இந்நிலையில், உத்தரகண்ட் டேராடூன் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய சிவசங்கர் பாபா டெல்லி காசியாபாத்தில் கைது செய்யப்பட்டார்.
காசியாபாத்தில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை டெல்லி போலீசார் கைது செய்து சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது.