முந்துங்கள் மக்களே.! இன்று தான் கடைசி நாள் பொங்கல் பரிசு பெறாதவர்களுக்கு SMS அனுப்பப்படும்.!

Default Image
  • தமிழகத்தில், இதுவரை 94.71% சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
  • பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாதவர்ககளுக்கு, அவரவர் ரேஷன் கடைகளில் இருந்து பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ளுமாறு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் கடந்த 9-ம் தேதியில் இருந்து குடும்ப அட்டை ஒன்றுக்கு, ரூ.1000 ரொக்கமும், 1கி பச்சரிசி, சர்க்கரை, கரும்புத்துண்டு உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இதனை வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக நீண்ட நேரம் வரிசையில் நின்றபடி வாங்கிச் சென்றனர். இதுவரை 94.71% சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஒரு கோடியே 89 லட்சத்து 70 ஆயிரத்து 686 பேர் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்றுள்ளதாகவும், மீதமுள்ள 10 லட்சத்து 59 அயிரத்து 745 குடும்பங்களுக்கு இன்று மாலைக்குள் வழங்கப்பட்டுவிடும் என்றும், இன்றுதான் கடைசி நாள் எனவும் அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாதவர்ககளுக்கு, அவரவர் ரேஷன் கடைகளில் இருந்து பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ளுமாறு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்