Live: வைக்கம் போராட்ட நிறைவு விழா முதல்… சாத்தனூர் அணை நீர் திறப்பு வரை.!

இன்றைய வானிலை நிலவரம், பரபரப்பான தமிழக அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை உடனுக்குடன் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

TAMIL NEWS LIVE

சென்னை: வைக்கம் போராட்டத்தின் 100-ம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி கேரள மாநிலத்தில் புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த நிகழ்வில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் பங்கேற்க உள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் சுமார் ரூ.8.14 கோடியில் நினைவகம் புதுப்பிக்கப்பட்டது.

கனமழை காரணமாக சாத்தனூர் அணையில் இருந்து 10,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் திறப்பு 5,000 கன அடியில் இருந்து 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. 119 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 117.50 அடியாக உள்ளது. எனவே, ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

1 of 1
பால முருகன்

வெற்றி பெற்றார் குகேஷ்

  • தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது குகேஷ், உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார்.
  • பால முருகன்

    நாளை டை பிரேக்கர்

  • உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 14ஆவது சுற்று ஆட்டம் டிராவை நோக்கி நகர்கிறது. 14ஆவது சுற்றில் போட்டி தொடங்கி 2 மணி நேரம் முடிவடைந்துள்ள நிலையில் குகேஷ், லிரேன் சமநிலையில் உள்ளனர். இந்த ஆட்டமும் டிராவில் முடிந்தால் நாளை டை பிரேக்கர் முறையில் போட்டி நடத்தப்படும்
  • பால முருகன்

    முதல்வர் நெகிழ்ச்சி

  • தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பின்பற்றுபவன் என்ற முறையில், புகழ்பெற்ற இலக்கியச் சின்னமும், சமூக நீதிக்காக அயராது வாதிடும் தேவனூர் மகாதேவாவுக்கு “வைகோம் விருதை” வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
  • பால முருகன்

    அரவிந்த் கெஜ்ரிவால் அசத்தல் அறிவிப்பு

  • டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
  • மணிகண்டன்

    வைக்கம் முன்னோடி :

  • பெரியாரின் வைக்கம் போராட்ட வெற்றிக்கு பிறகு, இந்தியாவில் அமராவதி கோயில், பார்வதி கோயில்,  நாசிக்  கோயில் நுழைவு , தமிழ்நாட்டில் சுசீந்திரம்,  மதுரை மீனாட்சி கோயில், திருவண்ணாமலை கோயில், திருச்சி மலைக்கோட்டை கோயில், சென்னை பார்த்தசாரதி கோயில், ஈரோடு ஈஸ்வரன் கோயில் என அடுத்தடுத்த கோயில் நுழைவு போராட்டங்கள் வெற்றி கண்டன. – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
  • கெளதம்

    கூலி பட அப்டேட்:

  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
  • கெளதம்

    வெள்ள அபாய எச்சரிக்கை:

  • திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பதை முன்னிட்டு அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கும் என்பதால் தென்பெண்ணையாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • கெளதம்

    விருது வழங்கிய முதலமைச்சர்:

  • கர்நாடக மாநிலத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடிய எழுத்தாளர் தேவநூரு மகாதேவாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்‘வைக்கம் விருது’வழங்கி கௌரவித்தார்
  • கெளதம்

    தேங்கிய மழை நீர் – போக்குவரத்து பதிப்பு:

  • விட்டு விட்டு பெய்த கனமழையால் சென்னை புறநகர் பகுதியான பல்லாவரம் பாண்ஸ் மேம்பால இறக்கம், குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் தேங்கிய மழை நீரால் போக்குவரத்து பதிக்கப்பட்டுள்ளது.
  • மணிகண்டன்

    விஜய் வாழ்த்து : 

  • அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
  • மணிகண்டன்

    வைக்கம் 100 :

  • கேரளா மாநிலம் வைக்கத்தில் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக அங்கு புனரமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் ஒன்றாக பார்வையிட்டனர். 
  • மணிகண்டன்

    கமல் – ரஜினி :

  • நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கமல்ஹாசன் , ரஜினிக்கு தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் .
  • கெளதம்

    மழை… மழை… மழை …

  • தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.
  • மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை பெய்தது.
  • மேலும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், தி.மலை, வேலூர், கடலூர் மாவட்டங்களிலும் விடாது மழை பெய்து வருகிறது.
  • இதனிடையே, அரியலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டைக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • கெளதம்

    10 மணி வரை மழைக்கு வாய்ப்பு:

  • தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று (டிச.,12) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • அதன்படி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
  • கெளதம்

    பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை:

  • திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் கனமழை காரணமாக இன்று (டிச.12) பள்ளி, கல்லூரி இரண்டிற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • கெளதம்

    22 அடியை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி:

  • கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால், உபரி நீர் திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
  • கெளதம்

    நீர்திறப்பு அதிகரிக்கப்படும்:

  • திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால், அணையிலிருந்து நீர் வெளியேற்றம் படிப்படியாக அதிகரிக்கப்படும் என வருவாய்த்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
  • கெளதம்

    விடுமுறை:

  • கனமழை காரணமாக சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.12) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
  • கெளதம்

    பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு :

  • கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
  • கன மழை காரணமாக இதுவரை மொத்தம் 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • கெளதம்

    விடுமுறை… விடுமுறை ….விடுமுறை:

  • கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று (டிச.12) தமிழகத்தில் 20 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள.
  • இதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கெளதம்

    வைக்கம் போராட்ட நிறைவு விழா:

    கேரளா: வைக்கம் போராட்டத்தின் 100ம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகத்தை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    இந்த நிகழ்வில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் பங்கேற்க உள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் சுமார் ரூ.8.14 கோடியில் நினைவகம் புதுப்பிக்கப்பட்டது.

    கெளதம்

    விடுமுறை:

  • கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.12) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
  • கெளதம்

    அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு:

  • கனமழை காரணமாக விடுமுறை விடப்பட்ட 16 மாவட்டங்களில் இன்று (டிச.12) நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்புவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார்.
  • மணிகண்டன்

    திருவண்ணாமலை : கொடும் மழைக்கு மத்தியில் 2668 அடி உயரம் கொண்ட தீப மலைக்கு மகா தீப கொப்பரை கொண்டு செல்லப்படுகிறது.

  • நாளை மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள மலையில் மகா தீபம் ஏற்றப்படும்.
  • கெளதம்

    விடுமுறை:

  • கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.12) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
  • கெளதம்

    விடுமுறை:

  • கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.12) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
  • கெளதம்

    விடுமுறை:

    கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.12) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    1 of 1

    Follow us

    Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    லேட்டஸ்ட் செய்திகள்