LIVE : 4 மாவட்டங்களில் மிக கனமழை முதல்…‘ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா’ தாக்கல் வரை!
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று தாக்கல் செய்யப்படுவது முதல் வானிலை நிலவரம் குறித்த தகவல் வரை கீழே கொடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை : இன்று வட கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் ஒரே நாடு ஒரே திட்டத்தை செயல்படுத்துவதற்கான சட்டமசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நினைவை, இன்று ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த சட்டமசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.