தமிழகத்தில் இருந்த மிகப்பெரிய மாவட்டமான வேலூரில் இருந்து திருப்பத்தூர் , ராணிப்பேட்டை பிரிக்கப்பட்டு மேலும் இரண்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு இந்த இரண்டு மாவட்டத்திற்கான மாவட்ட ஆட்சியர்கள் ,எஸ்.பிக்கள் நியமிக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக மாவட்டங்களில் நிர்வாக பணிகள் தொடங்கும் வகையில் இன்று தொடக்க விழா நடைபெறுகிறது. தமிழகத்தில் 35-வது மாவட்டமாக திருப்பத்தூரை அங்கு உள்ள டான்பாஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் தொடக்க விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார்.
இதைத்தொடர்ந்து 36-வது மாவட்டமாக ராணிப்பேட்டையை ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட கால்நடை நோய் தடுப்பு மருத்துவ நிலைய வளாகத்தில் தொடக்க விழா நடைபெறுகிறது. இந்த இரண்டு விழாவிலும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் , துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…