வெற்றி நிச்சியம்! ‘நாளை முதல் நமது கொடி பறக்கும்’: த.வெ.க தலைவர் விஜய் நெகிழ்ச்சி!

Vijay Tvk

சென்னை : நாளை முதல் நமது கொடி பறக்கும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நெகிழ்ச்சியுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகரும், த.வெ.க கட்சியின் தலைவருமான விஜய் நாளை சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை அறிமுகம் செய்யவிருக்கிறார். இந்த விழாவிற்கு மாவட்டத் தலைவர்கள் உட்பட 250 நிர்வாகிகள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. காலை 7-க்குள் நிர்வாகிகள் கட்சி அலுவலகத்திற்கு வருகை தரவிருக்கிறார்கள். பின், சரியாக காலை 9.15 மணிக்கு கொடி அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், நாளை கட்சிக்கொடி மற்றும் கட்சி பாடல் அறிமுகம் செய்யப்படுவது குறித்து நெகிழ்ச்சியுடன் அறிக்கை ஒன்றையும் விஜய் வெளியீட்டு இருக்கிறார். அறிக்கையில் ” என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே…என ஆரம்பித்து, சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22 ” என கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது “நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு. கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன்.

நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். “தமிழ்நாடு இனி சிறக்கும்…வெற்றி நிச்சயம்” எனவும் நெகிழ்ச்சியாக அறிக்கையில் விஜய் கூறியிருக்கிறார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி பாடலை எழுத்தாளர் விவேக் எழுதியுள்ளதாகவும், பாடலுக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்